Monday, November 7, 2011

மூன்று நாட்கள் லண்டனில் தங்கியிருக்கவுள்ள கூட்டமைப்பினர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் முக்கிய அரசியல் பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளனர்!

Monday, November 07, 2011
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு லண்டன் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்திக்கவுள்ளனர்.

மூன்று நாட்கள் லண்டனில் தங்கியிருக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று திங்கட்கிழமை பிரித்தானிய நேரப்படி காலை 11.00 மணிக்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் முக்கிய அரசியல் பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா நோக்கிச் சென்றுள்ளார்.

அதனால் பதில் எதிர்கட்சித் தலைவராக பிரதித் தலைவர் கரு ஜயசூரியவோ, இணை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவோ நியமிக்கப்படாமல் எதிர்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment