Tuesday, November 01, 2011
இலங்கைக்கே உரித்தான உலக மரபுரிமைகளின் தற்போதைய எல்லைகள் தொடர்பான அறிக்கையொன்றை யுனஸ்கோ அமைப்பிடம் கையளிப்பதற்கு தேசிய மரபுரிமைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
முன்னர் இருந்தவாறே இலங்கைக்கே உரித்தான உலக மரபுரிமைகள் காணப்படுகின்றதா என்பதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் காந்தி விஜேதுங்க குறிப்பிட்டார்.
உலக மரபுரிமைகள் அமைந்துள்ள பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் மற்றும் அதன் பரப்பளவுகள் தொடர்பில் யுனஸ்கோ அமைப்பு குறித்த நாடுகளிடம் வருடாந்தம் ஆராய்வதாக அவர் கூறினார்.
உலக மரபுரிமைகளின் எல்லைகள் மாற்றமடைந்திருந்தால், குறித்த பகுதிகள் யுனஸ்கோ அமைப்பின் உலக மரபுரிமைகள் பட்டியலில் இருந்து அகற்றப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள எட்டுப் பகுதிகள் உலக மரபுரிமைகளாகப் பெயரிடப்படவுள்ளன.
அவற்றுள் நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆறு இடங்கள் அடங்குவதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சின் செயலாளர் கூறினார்.
சீகிரியா, தம்புள்ளை விஹாரை, காலி கோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய இடங்கள் கலாசார பகுதிகளாக பெயரிடப்பட்டுள்ளன.
ஹோட்டன் சமவெளி மற்றும் சிங்கராஜ வனம் ஆகியன நாட்டிலுள்ள இயற்கையான உலக மரபுரிமைகள் எனத் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் செயலாளர் காந்தி விஜேதுங்க மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment