Tuesday, November 08, 2011
வெகுஜன ஊடக நன்நெறிக்கு அமைய நடவடிக்கை இணையத்தளங்கள் யாவும் பதிவு செய்யப்பட வேண்டும்-இலங்கை!
Tel - 0094112512343
மின்னஞ்சல் :
amaratungamedia@yahoo,com, secretary@media.gov.lk
இணையமுகவரி : www.media.gov.lk
ஆகியவற்றினூடாக தொடர்புகொள்ளவும்.)
பல இணையத்தளங்கள் மற்றவர்களை அவமானப்படுத்தக்கூடிய வகையில் கீழ்த்தரமான பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சுக்கு பலதரப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சில இணையத்தளங்கள் சமூகத்திலுள்ள சில முக்கியஸ்தர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இத்தகைய இணைய தளங்களில் வரும் சில தகவல்கள் ஒரு தனி நபருடைய இரகசியத் தன்மையை சீர்குலைக்கக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக வெகுஜன ஊடக தகவல்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய சில இணையத் தளங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் நாட்டின் சுயாதீனத்துக்கும் மதிப்புக்கும் தீங்கிழைப்பதாகவும் அமைந்திருப்பதுடன் அவை நாட்டின் தலைவர், அமைச்சர்கள், சிரேஷ்ட அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதி முக்கிய பிரமுகர்களை இலக்காக வைத்து அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் கொடிய எண்ணத்துடன் செய்திகளை வெளியிட்டு வருவதாக அமைச்சின் இவ் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
இதுபற்றி அமைச்சு மேற்கொண்ட ஓர் ஆய்வின் மூலம் இந்த இணையத் தளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இத்தகைய இரகசிய இணையத் தளங்களை நடத்துபவர்கள், அரசாங்கம், அரசாங்க தலைவர் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்களை அவமானப்படுத்தி அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எண்ணத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சு நினைக்கிறது.
இந்த இணையத் தளங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் பத்திரிகா தர்மத்தை உதாசீனம் செய்து இவ்விதம் தனிப்பட்டவர்களின் இரகசியத் தன்மைக்கு எதிராகவும் அவர்களின் பாதுகாப்புக்கு தீங்கிழைக்கக்கூடிய வகை யில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக அமைச்சு இவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த இணையத் தளங்களில் வெளி யிடப்படும் செய்திகள் ஒருவருடைய தனித்துவத்தையும் இரகசியத் தன்மையை யும் துச்சமாக மதித்து பகிரங்கமாக பொய்யான தகவல்களை எழுதுவது ஊடகவியல் தர்மத்துக்கு இழைக்கும் மன் னிக்க முடியாத குற்றமாக அமைந்திருக்கிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்விதம் மற்றவர்களை அவமானச் சின்னங்களாக மாற்றும் தீய எண்ணத்துடன் பொய்யான தகவல்களை வெளியிடும் இந்த இணையத்தளங்களுக்கு எவரும் ஆதரவளிக்கக்கூடாது.
அத்துடன் பொதுமக்களின் நன்மைக்காக இவை செயற்படுவதை தடுத்துவிட வேண்டும் என்று அமைச்சு கருதுகிறது.
மேலே குறிப்பிட்ட இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்ட பின்னர் வெகுஜன ஊடக தகவல் துறை அமைச்சு இத்தகைய ஊடகங்கள், வெகுஜன ஊட கங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்பு களுக்கு அமைய நாட்டின் சட்டத்துக்கு ஏற்புடைய வகையில் தகவல்கள் உள்ளூரில் அல்லது வெளிநாடுகளிலிருந்து இணையத் தளங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இவ்விதம் ஊடக தர்மத்துக்கு ஏற்புடைய வகையில் நடந்து கொள்ளும் சகல இணையத் தளங்களும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சுடன் தொடர்புகொண்டு தங்களை உத்தியோக பூர்வமான முறையில் அமைச்சில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சு விடுத்துள்ள இந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது பற்றி மேலதிக தகவல்களை பெற விரும்புபவர்கள் அமைச்சின் மேல திக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பிரிவு, திருமதி கே. டபிள்யூ. ரி. என். அமரதுங்கவுடன் பின் வரும் தொலைபேசி இலக்கத்து டன் 0094112515945 அல்லது பக்ஸ் : 0094112512343,

No comments:
Post a Comment