Wednesday, November 2, 2011

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் 7ம் திகதி பிரித்தானிய ஆளும் - எதிர்க்கட்சியினரை சந்தித்து பேச உள்ளனர்!

Wednesday, November 02, 2011
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டள்ள தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் 6 ஆம் திகதி லண்டனில், அங்குள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கையின் தற்போதை அரசாங்க நிலைமைகள் மற்றும் தமது கட்சியின் பொறுப்பு குறித்து கலந்துரையாட உள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் 7 ஆம் திகதி பிற்பகல் 10 மணிக்கு பிரித்தானிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரை சந்தித்து இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து தெளிவுப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment