Saturday, November 5, 2011

4.62 கோடி அமெரிக்கர் வறுமையால் பாதிப்பு!

Saturday, November 05, 2011
வாஷிங்டன் : அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 4.62 கோடியாக அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் ஸி10.93 லட்சத்துக்கும், தனி நபராக இருப்பின் ஸி5.46 லட்சத்துக்கும், நாள் ஒன்றுக்கு ஸி1,500க்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகிறது.

இந்த அளவை அடிப்படையாக வைத்து வாஷிங்டனை சேர்ந்த புரூகிங்ஸ் நிறுவனம் ஆய்வு செய்தது. ஆய்வு குறித்து இந்நிறுவனத்தை சேர்ந்த எலிசபெத் கினீபோன் கூறுகையில், கடந்த 1940ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2010ம் ஆண்டில் அமெரிக்க மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் 2010ம் ஆண்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், மக்கள் பசி, பட்டினியால் வாடும் நிலை உருவாக வாய்ப்பில்லை.

வேலை வாய்ப்பின்மை, விலை உயர்வு, நிதி நெருக் கடி காரணமாக மத்திய மேற்கில் டெட்ராய்ட், டோலிடோ, ஓகியோ நகரங்களில் வறுமையின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதில் வெள்ளை இன மக்களின் அளவும் உயர்ந்துள்ளது. தெற்கு உள்ளிட்ட சில மெட்ரோ நகரங்களான எல்பாசோ, டெக்சாஸ், பாட்டன்ரோ, லூசியான பகுதிகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. குற்றங்களும் அதிகரித்துள்ளதாக எலிசபெத் தெரிவித்தார்

No comments:

Post a Comment