Thursday, November 24, 2011மாத்தறை, கம்புருகவ, பண்டாரமுல்ல பகுதியில் தனியார் பஸ் ஒன்றுடன் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
சோமாவதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும், டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment