






Monday, November 21, 20112012 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.52 க்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
ஜனாதிபதி உரை நிகழ்த்த ஆரம்பித்து சில நிமிடங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் பல்வேறு எதிர்ப்புகளை முன்வைத்து, பதாகைகளை ஏந்திய வண்ணம் எதிர்ப்பில் ஈடுபட்டமையே இதற்குக் காரணமாகும்.
இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்கள் சபையின் நடுவே பிரவேசித்து, எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இந்த அமைதியின்மைக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவு - செலவுத் திட்டம் தொடர்பாக தனது உரையை தொடர்ந்தும் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment