Sunday, November 20, 2011தமிழர்கள் வாழும் பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசை, இந்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதுபற்றி இலங்கையில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.காந்தா செய்தியாளர்களிடம்,
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை சீரமைக்க, இலங்கைக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடன் வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. இதில் பாலை-காங்கேசன் துறை ரெயில் பாதை திட்டத்துக்கு ரூ.150 கோடி அளிப்பதற்கான ஒப்பந்தம் 18-ந் தேதி கையெழுத்தானது.
தெற்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்துக்கும் இந்தியா நிதி அளிக்கிறது. இந்த திட்டத்துக்கு ரூ.850 கோடி செலவிடப்படும்.
ஓமாந்தை-பாலை, மெடவாச்யா-மடு, மடு-தலைமன்னார் இடையே அமைக்கப்பட இருக்கும் ரெயில் பாதைகளுக்கு ஏற்கனவே காண்டிராக்ட் முடிந்து விட்டது. இந்த திட்டங்கள் 2013-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்டு விடும்.
மேற்கண்ட ரெயில் பாதை திட்டங்கள் முடிந்து விட்டால், தமிழர்கள் வாழும் பகுதிகளில் போக்குவரத்து மேம்பாடு அடையும். காங்கேசன்துறை துறைமுகத்தை சீர்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.
ராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையேயான படகு போக்குவரத்து, இந்தியா-இலங்கை இடையே உள்ள வர்த்தகத்தை அதிகரிக்கும். இரு நாட்டு மக்களுக்கும் இந்த போக்குவரத்து பயன் உள்ளதாக இருக்கும்’’என்று கூறினார்.
No comments:
Post a Comment