Saturday, November 26, 2011

பாகிஸ்தான் ராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் தாக்குதல்;12 ராணுவ வீரர்கள் பலி!

Saturday, November 26, 2011
இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் நேட்டோ' படைகள் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் முகமது மலைப்பகுதியில் நேட்டோ படையின் ஹெலிகாப்டர்கள் அத்துமீறி புகுந்தன. பின்னர் ராணுவ சோதனை சாவடியின்மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அதில் 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என தெரியவில்லை.

இதுகுறித்து `நேட்டோ' செய்தி தொடர்பாளர் கூறும் போது, "ஆப்கானிஸ்தான் எல்லையில் இச்சம்பவம் நடந்துள்ளது. அதற்கான காரணம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment