Saturday, November 19, 2011தங்க முலாம் பூசிய இரும்புத் தகடுகளை விற்பனை செய்த ஐவர் கைது:-புதையல் தோண்டிய பிக்கு உட்பட 10 பேர் கைது!
புதையல் மூலம் கிடைத்ததாகக்கூறி தங்க முலாம் பூசிய உலோகத் துண்டுகளை வி்ற்பனை செய்த 5 பேர் வெலிகந்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பலரை ஏமாற்றி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய 955 உலோகத் தகடுகளை சுமார் 6 இலட்ச ரூபாவுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளி்ன் போதே சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து தங்கமுலாம் பூசிய இரண்டு கிலோகிராம் இரும்புத் தகடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இன்றைய தினம் பொலனறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
புதையல் தோண்டிய பிக்கு உட்பட 10 பேர் கைது!
அம்பாறை, உகண திசாவாவிக்கு அருகிலுள்ள சரணாலயத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சூரியவெவ, உகண மற்றும் உடதெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உகண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று சுற்றிவளைப்பு மேற்கொண்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.
கைதானவர்களில் பிக்கு ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதையல் தோண்டுவதற்காக சந்தேகநபர்கள் வந்த வேன், அதற்காக பயன்படுத்தப்பட்ட பூஜைப் பொருட்கள், மின்பிறப்பாக்கி போன்ற உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள், அம்பாறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பபடவுள்ளனர்.
No comments:
Post a Comment