Tuesday, October 11, 2011
சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பதிலளிக்கப் போவதில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலீல் ஷெட்டி கோரியிருந்தார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் சில அறிக்கைகளுக்கு ஏற்கனவே பதிலளித்துள்ளதாகவும், தற்போதைய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment