Tuesday, October 11, 2011
குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வு கட்டமைப்பாவது உருவாக்கப்படாவிட்டால் தமிழ்ச்சமூகம் தனது அடையாளங்களை இழப்பதோடு பேரினவாத ஆக்கிரமிப்பில் கரைந்து உருக்குலைந்து போகும் நிலையை யாரும் தடுக்க முடியாத நிலை ஏற்படலாம். என பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் அணியின் பொதுச் செயலாளரான தி. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துன்ன அறிக்கை வருமாறு
குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வு கட்டமைப்பாவது உருவாக்கப்படா விட்டால் தமிழ்ச்சமூகம் தனது அடையாளங்களை இழப்பதோடு பேரினவாத ஆக்கிரமிப்பில் கரைந்து உருக்குலைந்து போகும் நிலையை யாரும் தடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.
கிழக்கில் நடந்து முடிந்த வடக்கில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் கலாச்சார குடியேற்ற இராணுவ மயப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் மொத்தமாகவே இன்னும் ஓரிரு தசாப்தங்களில் தமிழ் மக்களின் அடையாளங்களை வாழ்வியலை பாரதூரமாக சிதைத்துவிடலாம்.. இதே நெருக்கடிகளை மலையகää முஸ்லீம் மக்களும் எதிர்நோக்குகிறார்கள்.
நிலம், நிதி, பொலிஸ், நீதித்துறை அதிகாரங்கள் தொடர்பில் கூடிய கரிசனை எடுத்து செயற்பட வேண்டியிருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் இந்த விடயங்கள் தொடர்பில் எவ்வளவுதூரம் முன்னேற்றம் இருக்கிறதென்பதில் தெளிவில்லை.
எனினும் தமிழ் மக்களின் நலனிலும் சமூக ஜனநாயகத்திலும் அக்கறையுள்ள அனைத்து அரசியல் சமூக சக்திகளும் இணைந்து விரைவாக செயற்பட வேண்டிய காலமிது. புத்தி சாதுரியத்துடனும் துணிச்சலுடனும் யதார்த்த நிலைமைகளை கருத்திற்கெடுத்து செயற்பட வேண்டும்.
தவறவிடப்படும் சந்தர்ப்பம் தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாரதூரமான நிலைக்கு இட்டுச்செல்லலாம்.
வாழும் சந்ததியும் வருங்காலச் சந்ததியும் தூற்றாமல் இருப்பதற்கு உரிய வழியில் நாம் செயற்பட வேண்டும்.
ஒரு அதிகாரப்பகிர்வு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ச்சியாக சமஷ்டி முறையிலான முழுமை பெற்ற கட்டமைப்பை நோக்கி செயற்பட வேண்டும்.
ஆரம்பத்திலேயே முழுமை பெற்றதொரு கட்டமைப்பு ஏற்பட்டுவிடாது. பேரினவாத இராணுவ மேலாதிக்க மனோநிலை நெகிழ்வு தன்மையுடையதாக இருக்குமென்று நாம் எண்ணிவிட முடியாது. அத்தகைய எண்ணம் பாமரத்தனமானது.
சர்வதேச பிராந்திய கோரிக்கைகளை முழுதாக செவிமடுக்கும் என்றில்லை. நிர்ப்பந்தங்களில் ஏதாவது வேண்டா வெறுப்பாக அல்லது ஏனோதானோ என்று நிகழும். ஆனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற முதுமொழியை கணக்கில் எடுத்துச்செயற்படுத்தவேண்டும்
ஆனால் இலங்கையின் நிலை தொடர்ந்து அவ்வாறுதான் இருக்குமென்று நாம் எதிர்பார்க்க முடியாது.
ஜனநாயக சு10ழல் நாடளாவியளவில் உருவாகும் போது பல்லினங்களின் நாடு என்ற கருத்து நிலையும் வலுவடையும்.
இப்போது நாம் எழுந்து நிற்பதற்கு ஒரு நியாயமான இடைவெளி குறைந்தபட்ச அதிகாரக்கட்டமைப்பு அவசியம்.
ஆக்கிமிடிசீன் வார்த்தையில் கூறுவதானால் இருப்பதற்கு ஒரு இடமும் தெண்டுவதற்கு ஒரு கோலும் தேவை.
தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

No comments:
Post a Comment