Monday, October 24, 2011ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் அவுஸ்ரேலியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது கூட்டத்தொடரில் பங்குகொள்வதன் பொருட்டே ஜனாதிபதி அவுஸ்ரேலியா செல்கிறார்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது கூட்டத்தொடர் இந்த முறை அவுஸ்ரேலிய பேர்த் நகரில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் தொடக்கம் பொது நலவாய நாடுகளின் கூட்டத் தொடருக்கான பல ஏற்பாடுகள் பேர்த் நகரில் இடம்பெற்று வருகின்றன
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் இந்த பொது நலவாய நாடுகளின்ன அரச தலைவர்களது மாநாட்டில், அதன் நிரந்த அங்கத்துவ நாடுகளினால் யோசனைகள் முன்வைக்கப்படும்.
இந்த நிலையில் இந்த முறை இடம்பெறும் பொது நலவாய நாடுகளின் அரச தலைவர்களது கூட்டத் தொடரானது அனேகரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக அவுஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment