Monday, October 24, 2011
லிபியாவில் சிர்த் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட கடாபிக்கு 2 மனைவிகள் மூலம் 7 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்களில் 2 பேர் தங்கள் குடும்பத்துடன் அல்ஜீரியாவுக்கு தப்பி சென்றுவிட்டனர். நேட்டோ படை குண்டு வீச்சில் ஒருவர் பலியாகிவிட்டார். முட்டாசிம் என்ற மகன் கடாபியுடன் கொல்லப்பட்டார்.
மற்றொரு மகன் சயீப் அல்- இஸ்லாம் என்பவர் தலைமறைவாகி விட்டதால் உயிருடன் இருக்கிறார். அவர் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனி யார் டி.வி.யில் திடீரென தோன்றினார். அப்போது தனது ஆதரவாளர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அவர் கூறியதாவது:-
நான் சாகவில்லை, இன்னும் உயிருடன் சுதந்திரமாக இருக்கிறேன். லிபியா மக்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன். என் தந்தையை (கடாபியை) கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது என்று ஆவேசமாக பேசினார். சயீப் அல்-இஸ்லாம் கடாபி ராணுவத்தில் கமாண்டராக இருந்தார். புரட்சி படையை எதிர்த்து போரிட்டு வந்த அவர் திடீரென சரண் அடைவதாக அறிவித்தார். பின்னர் தலைமறைவாகிவிட்டார்.1 1

No comments:
Post a Comment