Friday, October 21, 2011

மிருக காட்சிசாலையில் இருந்து திறந்து விடப்பட்ட சிங்கம், புலி, கரடி சுட்டு கொல்லப்பட்டன!

Friday, October 21, 2011
ஓகியோவின் முஸ்கிங்கம் கன்ட்ரியில் டெரி தாமஸ் என்பருக்கு சொந்தமான தனியார் மிருக காட்சி சாலை ஒன்று உள்ளது.
அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, ஓநாய்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்நிலையில் மிருக காட்சியில் இருந்து அவைகள் வெளியேறி அருகில் உள்ள

நகரங்களுக்குள் புகுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விலங்குகளை பிடிக்க வன அதிகாரிகளின் தேடுதல் வேட்டை நடத்தினர். முடிவில் அவைகள் சுட்டுக்கொல்லப் பட்டன. விசாரணையில்

இதுபற்றி தெரிய வந்ததாவது: ஜனேஸ்வில்லே நகரில் மிருக காட்சி சாலையில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட வன விலங்குகளை நகருக்குள் நேற்று முன்தினம் திறந்து

விட்டு தற்கொலை செய்து கொண்டார் மிருக காட்சி சாலையின் உரிமையாளர். தகவல் அறிந்ததும் வன விலங்குளை சுட்டுத்தள்ள உத்தரவிட்டது நகர நிர்வாகம். இரவோடு இரவாக வேட்டையாடி 18

புலிகள், 17 சிங்கங்கள் உட்பட 48 வன விலங்குகளை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக மிருக காட்சி சாலை உரிமையாளர் சிறையில்

அடைக்கப்பட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட் டார். அதற்கு பழிவாங்கும் வகையில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment