Friday, October 21, 2011
இலங்கையில் போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பகிரங்க அறிவித்தல் விடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஏபீசி வானொலி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியும் அதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அளித்த பதிலும் வருமாறு:
ஊடகவியலாளர்:- இப்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வருகிறார். கனடா மற்றும் பிரித்தானியா முந்திக் கொண்டதை போன்று இலங்கை மீது சர்வதேச போர் குற்ற விசாரணை நடத்த நீங்கள் பகிரங்கமாக வலியுறுத்திவீர்களா?
பிரதமர் ஜூலியா கில்லார்ட்:- நிச்சயமாக. கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இது குறித்து பகிரங்கமாக பேசி வருகின்றன. உங்களுடைய கேள்வி குறித்து நாங்களும் கவனம் செலுத்துவோம். இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக உள்வாரியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பொதுநலவாய தலைவர்கள் கூட்டத்தின் பின் அதன் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

No comments:
Post a Comment