Thursday, October 6, 2011

கொழும்பு - தூத்துக்குடி கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு!

Thursday, October 06, 2011
கொழும்பு - தூத்துக்குடி பயணிகள் போக்குவரத்து கப்பலின் பயணக் கட்டணம் உடன் அமுலுக்கு வரும்வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பண்டிகைக்காலத்தினை முன்னிட்டு மக்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனத்தின் பயணிகள் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் சித்ரா ஜயசிங்க குறிப்பிடுகிறார்.

இதற்கமைய பயணக் கட்டணம் இரண்டாயிரத்து 750 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையேயான போக்குவரத்தில் சாதாரண வகுப்பிற்கு ஒரு வழி பயணத்திற்கு ஆறாயிரத்து 150 ரூபாவும், இருவழி பயணத்திற்கு 12 ஆயிரத்து 210 ரூபாவும் அறவிடப்படப்படும்.

கொழும்பிலிருந்து வாராந்தம் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாலை 6 மணிக்கு தூத்துக்குடிக்கு கப்பல் பயணிக்குமென தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தூத்துக்குடியில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளி்ல் மாலை 6 மணிக்கு கொழும்பிற்கான கப்பல், பயணத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்தின் போது பயணிகள் 100, 150 மற்றும் 200கிலோகிராம் எடை வரையில் பொதிகளை கொண்டுச் செல்ல முடியுமென தெரியவருகிறது. அத்துடன் பயணிகளுக்கு காலை மற்றும் இரவு நேர உணவுகள் இலவசமாக வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment