Friday, October 28, 2011

யாழ். பல்கலைக்ககழக மாணவர் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

Friday, October 28, 2011
யாழ். பல்கலைக்ககழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரிக்கை முன்வைத்து கடந்த இரண்டு வாரகாலமாக முன்னெடுக்கப்பட்ட பகிஷ்கரிப்பை கைவிட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சுப்ரமணியம் தவபாலசிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, முறையாக தமக்கு அறிவிக்கப்படும் பட்சத்தில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்திணம் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment