Friday, October 28, 2011

அரசின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து மூனுக்கு விளக்கம்-மஹிந்த சமரசிங்க!

Friday, October 28, 2011
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்திற்கு அமைவாக நடைபெறுகின்ற மனித உரிமைகள் குறித்து ஆராயும் மூன்றாவது குழு முன்னிலையில் இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

ஐ.நா செயலாளர் நாயகம் பேன் கீ மூனை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியதை அடுத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றினார்.

இந்த கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியூயோர்க்கில் இருந்து நியூஸ்பெஸ்டுக்கு கருத்து தெரிவித்தார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முற்போக்கு செயற்திட்டங்கள் தொடர்பில் ஐநா செயலாளர் நாயகத்தை
தெளிவுபடுத்தியதாக அமைச்சர் கூறினார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பிலான செயற்பாட்டு திட்டம் குறித்தும் இதன்போது பேன் கீ மூனுக்கு விளக்கமளித்தாக மனித உரிமைகள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வருடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என நேற்று நடைபெற்ற ஐநா ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்தும் மஹிந்த சமரசிங்க இதன்போது கருத்து வெளியிட்டார்.

இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் தொடர்பில் அதன் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையின் சிபாரிசுகளை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக ஐநா செயலாளர் நாயகத்திடம் எடுத்து கூறியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் வெளிப்படைத்தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மூன்றாம் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

மனித உரிமைப் பேரவையின் கட்டமைப்பு மற்றும் அமைப்புசார் நடவடிக்கைகள் முழு அளவில் பக்கச்சார்பற்ற தன்மையுடையதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற சம்பவங்கள் குறிதது அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். தாருஸ்மான் அறிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆவணமாக ஐரோப்பிய ஒன்றியம் கருதிச் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாருஸ்மான் அறிக்கையை தயாரித்தவர்கள் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என நிபுணர் குழுவினரே ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் எந்தவொரு முடிவினையும் எடுக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடுகள் விதிகளை மீறிச் செயற்படக் கூடாது எனவும் அது ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த உலக நாடுகள் போதியளவு கால அவகாசத்தை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment