Tuesday, October 25, 2011இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதிவாய்ந்த வெளிநாட்டு பணம் மற்றும் தங்க நாணயங்களை சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயன்ற இருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலை பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளையைச் சேர்ந்த ஒருவர் தனது பயணப் பைக்குள் பணத்தை மறைத்து கொண்டு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்த யூரோ நாணயத்தின் பெறுமதி இலங்கை ரூபாவில் ஒரு கோடி 25 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 85 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நாணயங்களுடன் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை 3.10 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த இந்த குறித்த நபரின் பயணப் பையில் நகைகளும் பணமும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment