Monday, October 10, 2011
பாதாளக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அரசியலுக்கு வந்தால், நாட்டில் இவ்வாறான கொடூரச் சம்பவங்களே அரங்கேறும் என சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.முல்லேரியா பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஜனாதிபதியின் ஆலோசகரும், தொழிற் சங்கப் பணிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட மூவர் பலியாகினர்.இந்தச் சம்பவத்தில் கொழும்பு மாவட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வா உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரனின் ஆதரவாளர்களுக்கும், துமிந்த சில்வாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினாலேயே இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியது.இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் டியூ. குணசேகரவிடம் கேட்டபோது, பாதாளக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள்தான் நடைபெறும் எனக் கூறினார்.

No comments:
Post a Comment