Saturday, October 22, 2011
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் சர்வதேச ரீதியில் செயற்படும் புலிகளின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்காக இராணுவப்புலனாய்வு பிரிவை 6 பிரிவுகளாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இராணுவ தலைமையக முகாமை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று (21) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த முகாம் இரணைமடு வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நடைபெற்ற போது, சில புலி உறுப்பினர்கள் சரணடைந்தாகவும் மேலும் பலர் கைதுசெய்யப்பட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் கிடைத்து வருகின்றன. இதனை காலம் கடந்து அறிந்து கொண்டதால், இராணுவப் புலனாய்வு பிரிவை விரிவுப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இராணுவ முகாம்களை அரசாங்க இடங்களிலும், தற்காலிக இடங்களிலும் அமைப்பதற்கு பதிலாக நாடு முழுவதும் நிரந்தர இராணுவ முகாம்களை ஏற்படுத்தும் நோக்கத்தின் ஒரு நடவடிக்கையாகவே கிளிநொச்சி இராணுவ முகாம் தலைமையக முகாம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
புலிகளில் இருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பாகும்
இலங்கை இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை, அதிலிருந்து தப்பியோடியிருப்பவர்கள் மீண்டும் உருவாக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இராணுவத்தின் பொறுப்பாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸ கிளிநொச்சியில் தெரிவித்திருக்கின்றார்.
வட இலங்கையில் புலிகளின் அரசியல் தலைநகராகத் திகழ்ந்த கிளிநொச்சியில், இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ தலைமையகத் தொகுதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸ வைபவரீதியாகத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியிருக்கின்றார்.
வட இலங்கையில் புதிய இராணுவ தலைமையகங்களை உருவாக்குவதன் நோக்கம் மற்றும் அது குறித்த மக்கள் மனநிலை பற்றி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் செவ்வி.
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் 40 மில்லியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், இராணுவத்தினரின் பெரும் தியாகத்தின் மூலம் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அடைந்துள்ள வெற்றியைப் பேணி பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு அமைதியும் சமாதானமும் நிறைந்த நாடொன்றைக் கையளிக்க வேண்டியிருக்கின்றது. எனவே, அதற்கு ஏற்ற வகையில் மீண்டும் புலிகள் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபாயா தெரிவித்திருக்கின்றார்.
யுத்த காலத்தில் ஒரு படையணியாகத் திகழ்ந்த இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு இப்போது ஆறு அணிகளாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமாதானச் சூழ்நிலையில் இராணுவத்தினர் என்னென்ன கடமைகளில் ஈடுபட வேண்டுமோ அத்தகைய கடமைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். அதற்கான தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க வகையில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் முக்கிய இராணுவ உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment