Sunday, October 2, 2011

நாட்டில் எரிவாயு வளம் உள்ளது-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Sunday, October 02, 2011
நாட்டில் பெருமளவிலான எரிவாயு வளம் காணப்படுவது அகழ்வாராய்ச்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இலங்கையில் எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் காணப்படுகின்றமை தொடர்பில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்ட நிறுவனம் இன்றைய தினம் தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி மாநகர் சபையின் நிர்வாகக்குழு மற்றும் ஊழியர்களை முற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எண்ணெய் வளம் தொடர்பில் தனது செயலாளர் ஊடகங்களுக்கு நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இரண்டாவது கிணற்றில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இறைவனின் ஆசியுடன் எண்ணெய் வளம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் கண்டியில் மட்டுமல்லாது இதுவரை காலமும் வெற்றிகொள்ள முடியாது போன கொழும்பு மாநகர சபையிலும் கூட்டமைப்பு இம்முறை பாரிய வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை மூவாயிரம் மில்லியன் ரூபாவிற்கு கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment