Sunday, October 2, 2011

கன மழை, வெள்ளம் பிலிப்பைன்சில் 55 பேர் பலி!

Sunday, October 02, 2011
மணிலா: பிலிப்பைன்சில் கன மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்சில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. தலைநகர் மணிலா உள்பட பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்பு பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இடத்தை விட்டு நகர முடியாமல் ஏராளமானோர் வீடுகளின் கூரையில் உட்கார்ந்திருக்கின்றனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் வீடு இடிபாடுகளில் சிக்கியும் பலியானவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்திருப்பதாக மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment