Thursday, October 13, 2011

புலிகளின் நண்பர்களே யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை வலியுறுத்துகின்றனர்-ராஜீவ விஜேசிங்க!



Thursday, October 13, 2011
புலிகளின் நண்பர்களே யுத்தக் குற்றச் செயல் தொடர்பான விசாரணைகளை வலியுறுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

திரிபுபடுத்தப்பட்ட ஓர் ஆவணப்படத்தின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செனல்4 ஆவணப்படம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் செனல்4 ஆவணப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் மீது மட்டுமே யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment