Thursday, October 13, 2011

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகிறார்

Thursday, October 13, 2011
வியட்நாம்; ஜனாதிபதி ட்ருவான் ட்ரென் சங்க் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.

இவருடன் அந்த நாட்டு பிரதிபிரதமர், நிதி அமைச்சர் மற்றும் 60 வர்த்தகர்க பிரமுகர்களும் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2009 ஆம் ஆண்டு வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, விடுத்த அழைப்பிற்கு அமையவே, வியட்நாம் ஜனாதிபதி தற்போது இலங்கை வருகிறார்.

1970 ஆம் ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே ராஜதந்திர உறவுகள் ஆரம்பமான நிலையில், வியட்நாமிய ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வியட்நாம் ஜனாதிபதி தமது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ், உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

வியட்நாம் ஜனாதிபதி இலங்கையுடன் அரசியல், பாதுகாப்பு, முதலீடுகள், நிதி, மற்றும் தொழிற்பயிற்சி வழங்கள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பலவற்றில் கைச்சாத்திடவுள்ளார்.

இதனிடையே எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள வியட்நாம் தூதரகத்தை வியட்நாம் ஜனாதிபதி ட்ருவான் ட்ரென் சங்க் திறந்துவைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment