Sunday, October 23, 2011
மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் வீடு வாங்குவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரதி அமைச்சரான விநாயகமூர்தி முரளிதரன்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
காணிப்பிரச்சினைகள் தனியே தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லை. எல்லா சமூகத்தினருக்கும் உள்ளது. இந்தப் பிரச்சினையை நிர்வாக ரீதியாகவே நாம் தீர்க்க வேண்டும்.
அதிபருடனும், அரசாங்கத்துடனும் இணைந்து கொள்வதன் மூலமே எமது பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்களால் நன்மை பெறமுடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொழும்பிலும் வெளிநாடுகளிலும் கூட வீடுகள் உள்ளன. இவர்களுக்குத் தேவையானால் மாத்தறையிலும் கூட ஒரு வீட்டை வாங்கலாம்.
ஆனால் மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் ஏன் வீட்டை வாங்க முடியாது? என்றும் பிரதி அமைச்சர் கருணா கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment