Sunday, October 02, 2011வடக்கு மக்களுக்கு நீதிச் சேவையை காலடிக்குக் கொண்டு வந்து வழங்கும் வாய்ப்பு அரசாங்கத்தினால் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கிளிநொச்சியில் தெரிவித்தார்.
கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட நீதிமன்றம் மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். குறித்த நீதிமன்றங்களை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக அமைச்சர் ஹக்கீம் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தனர்.
வடக்கில் புலிகளின் வசமிருந்த நீதி மன்றங்களை மீண்டும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. நீதிச் சேவையை விரிவுபடுத்தி மக்களுக்கு அதன் மூலமான நன்மைகளை துரிதமாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட மக்க ளுக்காக பூநகரியில் சுற்றுலா நீதிமன்ற மொன்றை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் பணியாற்று வதற்காக 30 புதிய நீதவான்கள் நியமிக்கப்பட உள்ளதாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய நீதவான்களுக்கு இந் தியாவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நிலுவையில் உள்ள சகல வழக்குகளையும் விரைவில் விசா ரணை நடத்தும் நோக்கில் இந்த நியமனங் கள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட் டுள்ளார். கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டடடொன்றை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment