Sunday, October 02, 2011இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்கெடுக்க முன்வருமாறு புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாட்டுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் குறிப்பிடுகிறார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரத்து 800 முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்துவதனை முன்னிட்டு அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார். ஒரு காலத்தில் நீங்கள் புலிகளால் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டு இயக்கத்தில் இணைக்கப்பட்டீர்கள். அன்றைய காலகட்டத்தில் நீங்கள் கண்டி ருந்த உங்கள் கிராமங்கள், யுத்தத்தின் பின் முற்றிலும் மாறுபட்ட, அபிவிருத்தி அடைந்த நிலையில் இருப்பதை இனி நீங்கள் நேரடியாக காணலாம்.
மற்றைய நாடுகளில் இவ்வாறான புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஐந்து வருடங்கள் வரை நீடிப்பதுண்டு. ஆனாலும் நாம் அதனை இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்துள்ளோம். அந்த வகையில் புனர்வாழ்வு நடவடிக்கையிலும் இலங்கை உலக நாடுகளுக்கு முன்மாதிரியானதாகவே செயற்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் விடுவிக்கப்பட் டுள்ள நீங்கள் அனைவரும் இலங்கையின் அபிவிருத்திப் பயணத்தில் உங்களாலான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment