


Thursday, October 06, 2011தேசிய மாணவர் படையணியின் கடற்படை மகளிர் மாணவர்படையணியின் மதிப்பீட்டு முகாம் கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 01 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடலோர கல்லூரியில் இடம் பெற்றது.
இம் மகளிர் படையின் வெளியேறல் அணிவகுப்பு கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி இடம்பெற்றதுடன், இதில் தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜீ.பீ.டபில்யூ ஜயசுன்தர ஆர்.டபில்யூ.பி ஆர்.எஸ்.பி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு மரியாதையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இறுதி வெளியேறல் அணிவகுப்பில் கடற் படையின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ரியார் அட்மிரால் ஜயன்த கொழம்பகே ,கடற்படை உயர் அதிகாரிகள், தேசிய மாணவர் படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment