Saturday, October 15, 2011
கொள்ளை மற்றும் மக்களை மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவரொருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவொன்றை நேற்று(ஒக்-14) பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
இக் குழுவினர் தங்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர்கள் எனக் கூறி உஸ்ஸன் முருசுவில் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டினுள் நுழைந்ததாகவும், பதிவுசெய்வதற்காக வருகை தந்திருப்பதாக கூறி, பின் குடும்ப அங்கத்தவர்களை மிரட்டி அங்கிருந்த 130,000 ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசியை திருடி வீட்டை விட்டு வெளியேறும் போது அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்கள் என கொடிகாமம் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட சம்பவத்தின் மூலம் இராணுவத்தினரின் பெயரை குறிப்பிட்டு பலர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது தெளிவாகின்றது. இதன் மூலம் இராணுவத்தினரின் பெயரையும், வடக்கில் இடம்பெற்றுவரும் மீள் புனர்நிர்மான நடவடிக்கைகளையும் சீர்குழைக்க சிலர் முற்படுவது தெளிவாகின்றது.
மேலும்,இந் நபர்களை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகும் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment