Wednesday, October 5, 2011

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை-நிமல் சிறிபால டி சில்வா!

Wednesday, October 05, 2011
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேசிய பின்னரே திகதி நிர்ணயிக்க ப்படும் எனவும் சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்குமிடையே இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுள்ளன.

எதிர்வரும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறவுள்ள 12 ஆவது சுற்றுப் பேச்சுவார்த் தையின் போது இனப்பிரச்சினை தீர்வு மற்றும் மிக முக்கிய விடயங்கள் ஆராயப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படு கிறது.

No comments:

Post a Comment