Wednesday, October 05, 2011புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, தமிழ் மக்கள் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹாண் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாகரன் தமிழ் மக்களுக்கு பெரும் துயரங்களை ஏற்படுத்தினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்களின் சிந்தனைகளில் சிலர் விஷம் தூவி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை இல்லாதொழிக்க அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலி தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ருத்ரகுமாரன், நெடியவன், இமெனுவல் மற்றும் விநாயகமூர்த்தி போன்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேற்குலக நாடுகள் இலங்கையை விமர்சனம் செய்வதனை விடவும் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளுக்கு ஆதரவான கட்சி என அவர் தெரிவித்துள்ளார். இனவாத கொள்கைகளை விட்டு கூட்டமைப்பு வெளியில் வர வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு என்ற பேதமின்றி நாட்டின் சகல தரப்பினரும் சகோதரர்களைப் போன்று வாழ வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment