Monday, October 24, 2011
உடவளவயில் நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்படடுள்ளனர்.
கைதான சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் என்பதுடன் அவர் மீது ஆட்கொலை தொடர்பில் குற்றச்சாட்டுக்களும் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஏனைய சந்தேகநபர்கள் மூவரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் எம்பிலிபிட்டிய கொலம்பகேஆர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எம்பிலிபிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் சகோதரரும் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொலை செய்வதற்கு பயன்படுத்திய ரி- 56 துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பணம் மாணிக்ககல் மற்றும் தங்கஆபரணங்கள் என்பவற்றை கொள்ளையிடச் சென்ற போது வர்த்தகர் அடையாளம் கண்டுள்ளதை அடுத்து குடும்ப உறுப்பினர்கள் சகலரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உடவளவ பனஹடுவ பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இந்த சந்தேகநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

No comments:
Post a Comment