Saturday, October 15, 2011
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த வியட்நாமின் ஜனாதிபதி ட்ருவோங் ரான் சாங் இன்று பிற்பகல் தமது தாயகம் திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியட்நாம் ஜனாதிபதி சுமார் 12 பதினைந்து அளவில் சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வியட்நாமின் ஜனாதிபதி இங்கு தங்கியிருந்த காலப்பகுதியினுள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உட்பட பல உயர்மட்ட அரச தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, உரிய தருணத்தில் தேவைப்படும் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வியட்நாம் தயாராகவுள்ளதாக ட்ருவோங் ரான் சாங் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, தாயகம் திரும்புவதற்கு முன்னர் வியட்நாம் ஜனாதிபதி, வாட் பிளேசில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வியட்நாமிய தூதுவராலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment