Wednesday, October 12, 2011ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில் அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸிற்கும், ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அப்போதைய பிரதித் தலைவர் கரு ஜயசூரிய வீட்டில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கான சுவரொட்டிகள், பதாகைகள் உள்ளிட்ட பிரச்சார உத்திகள் தொடர்பிலும், எதிர்தரப்பு பிரச்சார நடவடிக்கைகள் குறித்தும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குடும்ப ஆட்சி நிலவுவதாகவும், ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும், ஊடக சுதந்திரம் கிடையாது எனவும், தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்டவில்லை எனவும் கரு ஜயசூரிய, அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமானதும், நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றியீட்டுவார் என கரு ஜயசூரிய நம்பிக்கை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவான வாக்காளர்கள் வாக்களித்தால் நிச்சயமாக சரத்பொன்சேகா வெற்றியீட்டுவார் எனவும், இதன் காரணமாகவே ஆளும் கட்சி குறைந்தளவு வாக்கு பதிவு இடம்பெற வேண்டுமென விரும்புவதாகவும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment