Wednesday, October 12, 2011

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்¨புலி ஆதரவு அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் இலங்கை அரசாங்கம்!

Wednesday, October 12, 2011
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புலி ஆதரவு அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பச் செயலாளர் லியாம் பொக்ஸ்; மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளின் மூலம் இலங்கைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

லியாம் பொக்ஸ் அவரது நண்பர் அடம் வெரிட்டியை இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களில் இணைத்துக் கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் உத்தரவிட்டுள்ளார்.

ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலி ஆதரவாளர்கள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண், முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மில்லிபாண்ட் உள்ளிட்ட பலருடன் புலி ஆதரவு அமைப்புக்கள் நெருங்கிய தொடர்பைப் பேணியதாக அரசாங்கத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டதன் பின்னணியில் புலி ஆதரவு அமைப்புக்கள் செயற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

லியாம் பொக்ஸிற்கு எதிரான விசாரணை போன்று ஏனைய சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டால் புலி ஆதரவு அமைப்புக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment