Thursday, October 27, 2011

ஆசிய நாடுகளை வளமான நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்புண்டு-ஜனாதிபதி மஹி்ந்த ராஜபக்ஸ!

Thursday, October 27, 2011
ஆசிய நாடுகளை வளமான நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் வர்த்தக தலைவர்களுக்கும் இருப்பதாக ஜனாதிபதி மஹி்ந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியை பாதுகாப்பது ஆசிய வலயத்தைச் சேர்ந்த தலைவர்களின் முக்கிய கடமையென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொதுநலவாய அமைப்பின் கூட்டத் தொடரினையொட்டி இன்று நடைபெற்ற வர்த்தக மாநாட்டின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார சுட்டெண்களை கருத்திற்கொள்ளும் போது ஆசியாவின் பொருளாதார நிலைமை சிறப்பாக உள்ளமை தொடர்பில் தெளிவாக புரிந்துகொள்ளமுடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் அதனை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

தவிர்க்க முடியாத பிரச்சினைகளையும் சர்வதேச சவால்களையும் எதிர்கொள்ள பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்திருத்தல் அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வினைத்திறனான வர்த்தக முறைமை-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

இன்னல்களுக்கு முகங்கொடுக்க, தமது வர்த்தகத்தினுள் உரிய நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தடுக்க முடியாத காரணங்களால் ஏற்படுகின்ற திறந்த பொருளாதார பிரச்சினைக்கு பிராந்திய நாடுகள் முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சந்தர்ப்பம் ஏற்படுகின்ற போது அபிவிருத்தி பணிகளை முன் எடுத்து செல்ல வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர்?

பொது நலவாய நாடுகளின் அமைப்பில், மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை நியமிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிராந்திய ரீதியாக மனித உரிமைகளை பேணுவதே இதன் பிரதான நோக்கம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதற்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக. அவுஸ்திரேலிவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஆதரவளிக்கவுள்ளன.

இலங்கைக்கு எதிராக பல்வேறுப் பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான ஒரு ஆணையாளர் நியமிக்கப்படுவதற்கு முயற்சித்தால், அதற்கு இலங்கையின் ஆதரவு கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment