Thursday, October 27, 2011சர்வதேச நாடுகள் சிலவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளது.
நான்கு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்.குடாநாட்டின் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கேட்டு அறிந்துகொண்டனர்.
இந்தியா, பிரித்தானியா, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வடக்கில் புனர்வாழ்வு நிலையங்கள், கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் மற்றும் புதிய வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தெடர்பாகவும் ஆராய்ந்தாக யாழ். அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment