Wednesday, October 05, 2011அரச தலைவர்களுக்கு பொருந்தும் ஹேக் சர்விஸ் என்ற சர்வதேச இணக்கப்பாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் பொருந்தும் என்பதால், அமெரிக்க நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி, இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
புலிகளின் தளபதியான ரமேஷின் மனைவி வாசலா தேவி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் இலங்கை உட்பட்டது என்ற நிலைமையில், அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் பதில் இலங்கை நீதியமைச்சினால் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பாணை விடுத்துள்ளமையானது இலங்கையின் இறையாண்மையை மீறும் செயல் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment