Wednesday, October 05, 2011கடற்படை அதிகாரிகளின் அறக்கடளை ஆண்டு விழாப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா. ‘’இந்திய மீனவர்கள் தொடட்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது மிகப்பெரிய விஷயம். இது இரு நாட்டு கடற்படை தொடர்பான விஷயம் அல்ல, இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டிய விஷய்மாக இது உள்ளது.நமது கடல் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ரேடார்களைக் கண்காணிக்கும் போது நமது மீனவர்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர்.ஆனால் அவர்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.இரு நாட்டு அரசுகளும் மீனவப் பிரதிநிதிகளும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் இது.கடலோரப் பாதுகாப்பில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. 80.90, களில் ஏற்கனவே தமிழகத்திற்கு நிறைய அனுபவம் இருக்கிறது” என்று பேசினார் நிர்மல் வர்மா...
இலங்கையில் சீன தலையீடு அதிகரிப்பு: தெற்காசிய பிராந்தியத்துக்கே அச்சுறுத்தல்-விமானப்படைத் தளபதி எயர் சீப் மார்சல் என்.ஏ.கே. பிறவுண்!
இந்தியாவின் அயல் நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதுடன் இந்த நாடுகளின் விவகாரங்களிலும் சீனா தலையிடுவதாக இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீப் மார்சல் என்.ஏ.கே. பிறவுண் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனாவின் இவ்வாறான தலையீடுகள் அதிகரிப்பதானது தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கே பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அவர், இந்த விடயத்தில் இந்தியா அவதானத்துடன் செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் நிலைமைகளைத் தனது நாடு உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமைகளை முகங்கொள்ளும் வகையில் இந்தியா தயாரக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment