Saturday, October 22, 2011
வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற காணி பிரச்சினைகள் தொடர்பில், ஒத்தி வைக்கப்பட்ட விவாதம் ஒன்று நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
பிரேரனையை முன்வைத்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், கடந்தகாலங்களை மறந்து, எதிர்காலம் நோக்கி செயற்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.
நான் ஜனாதிபதியை குறைகூறவில்லை. அவரை குறைக் கூறவும் முடியாது.
பண்டாநாயக்க செல்வா உடன்படிக்கை மற்றும் டட்லி - செல்வா உடன்படிக்கை என்பவற்றை அப்போதே அமுலாக்கி இருந்தால், இந்த பிரச்சினைகளை எப்போதே தீர்த்திருக்கலாம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் இங்கு கட்டாயம் பேசப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.
டட்லி – செல்வா உடன்படிக்கை அமுலாக்கப்பட வேண்டும். அதன் மூலம் வடக்கில் உள்ள காணி பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அத்துடன் நான் அரசாங்கத்துக்கு சொல்வது என்னவெற்றால், மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குங்கள். இது தொடர்பில் வடக்கு கிழக்கின் தமிழ் அரசியில் பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வடக்கில் மாத்திரம் இன்றி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அபிவிருத்திகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுவதாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதனை உரிய சட்டத் திட்டங்களுக்கு அமைய முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment