Friday, October 07, 2011
மட்டகளப்பில் இடம்பெற்றுவரும் “நமக்காக நாம்” வீடமைப்பு திட்டத்தின் 6ஆம் கட்ட நிர்மானப்பணிகளை மேற்பார்வை செய்யும்முகமாக, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷ நேற்று(ஒக்-06) மட்டக்களப்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
சொந்த வீடுகளை நிர்மானித்துக் கொடுப்பதன் மூலம் படைவீரர்களின் குடும்பங்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சால் “நமக்காக நாம்” வீடமைப்பு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது இத் திட்டத்தின் 6ஆம் கட்டப்பணிபகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இத் திட்டமானது, பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலுடனும், மேற்பார்வையுடனும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் 5ஆம் கட்டப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள அதேவேளை, அம்பாறை மாவட்டத்திலும் நிர்மானப்பணிகள் பூர்த்தியடையும் தருவாயை அடைந்துள்ளன.
இவ் விஜயத்தில், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் உப தலைவி திருமதி. இந்து ரத்தினாயக மற்றும் சேவா வனிதா பிரிவின் ஏனைய அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

No comments:
Post a Comment