Sunday, October 2, 2011

போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது:-கனடாவில் தொழில் வாய்ப்பு - மோசடி நபர்கள் கைது!

Sunday, October 02, 2011
கல்கிஸ்ஸ, தட்டோவிட்ட பகுதியில் போலி நாணயத் தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் இதுத் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...

கனடாவில் தொழில் வாய்ப்பு - மோசடி நபர்கள் கைது!

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை நபர்களிடமிருந்து வசூலித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹரகம பகுதியில் இயங்கிவந்த நிறுவனமொன்றின் உரிமையாளர் அங்கு பணி புரிந்த இரண்டு ஊழியர்கள் ஆகியோரோ கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக நுகேகொடை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவிற்கு 13 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முறைப்பாடு செய்தவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வங்கிகள் ஊடாக சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு பண வைப்பு செய்துள்ளதாகவும் தெரிவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment