Sunday, October 2, 2011

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது-மாவை சேனாதிராசா!

Sunday, October 02, 2011
பொது மக்கள் நலன் கருதி பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டது.

இதனோடு இணைந் ததாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும், சரணடைந்தவர்களையும் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு உதவிச் சட்ட ஏற்பாடுகளுக்கு எதிராகவும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியால் உதவிச் சட்ட ஏற்பாடுகள் குறித்து கடந்த மாதம் பகிரங்கப்படுத்தப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த உதவிச் சட்ட அமுலாக்கத்திற்கும் பிரகடனத்துக்கும் இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.

சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஊடாகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சட்டங்களின் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதால் இவ்வாறான உதவி சட்ட ஏற்பாடுகள் சட்டவிரோதமானது எனவும் செல்லுபடியற்றது எனவும் மோகன் பாலேந்திரா தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment