Thursday, October 06, 2011நெதர்லாந்தில் புலி இயக்க ஆதரவு குழு சனிக்கிழமை பள்ளி நடத்தி வருவது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நெதர்லாந்து அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நெதர்லாந்தில் புலிகள் இயக்க ஆதரவு குழு சனிக்கிழமை நாட்களில் தமிழ் சிறுவர்களுக்கு 21 பள்ளிகளை நடத்தி வருவதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டது.
குறித்த பாடசாலைகள் நெதர்லாந்து அரசின் கல்வி திட்டத்திற்கு உட்பட்டதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாணவர்கள் தமிழ் மற்றும் கலாச்சாரம் குறித்து தமிழ் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திலும் கற்பிக்கப்படுவதாக நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஐவோ ஒப்ஸ்டெல்டென் (Ivo Opstelten) தெரிவித்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நெதர்லாந்தில் புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் 5 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இம்மாதத்தில் வழங்கப்பட்ட பின்னர் குறித்த 21 பாடசாலைகளை மூடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
21 பாடசாலைகள் குறித்த நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டுமென நெதர்லாந்து கிருஸ்த்தவர் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளித்துள்ள நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment