Thursday, October 6, 2011

சகல பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் இடமாற்றம்!

Thursday, October 06, 2011
தொம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய சகல பொலிஸ்உத்தியோகஸ்தர்களும் வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றுவதற்காக வேறு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன் தொம்பே பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட அதிகாரி கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை தொம்பே பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment