Friday, October 07, 2011இரண்டு கிலோ எடைகொண்ட தங்க நகைகளைக் கடத்தி வந்த இலங்கையர் எண்மர் சென்னை விமான நிலையத்தில் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து பெருமளவான நகைகளைக் கடத்தி வரவுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து இலங்கையிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் சென்னை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
ஜெட் எயார்வேஸ் விமானத்தில் சென்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு இரண்டு மணிநேர விசாரணையின் பின்னரே பொலிஸாரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது பயணப்பொதிகளை சோதித்துப் பார்த்போது சுமார் 2 கிலோ எடைகொண்ட தங்க வளையல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment