Sunday, October 02, 2011இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் தமிழ் மக்களுடனான அரசியல் நல்லிணக்கத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனிக் மேற்கண்டவாறு கூறினார். மூன்று தசாப்த போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களாகியும், இலங்கையால் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரச் செய்ய முடியாமல் இருப்பதாகவும், இலங்கையைப் பற்றி சர்வதேச முதலீட்டாளர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அருகி உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
நட்புரிமை பாராட்டும் வர்த்தக நடவடிக்கைகளை உத்வேகப்படுத்துவதில் அரசாங்கம் காலதாமதப்படுத்தி வருவதாகவும் அவர் காரணம் கற்பித்தார்.
அதே வேளையில், பிராந்தியத்தில் உள்ள அயல் நாடுகள் உலக வங்கியால் மேற் கொள்ளப் பட்ட வருடாந்த தரப்படுத்தலில் சிறந்த நிலையில் இருப்பதாகவும் அந்த நாடுகள் பொருளாதார வருவாயைப் பெற்றுத் தரும் நாடுகளுடனேயே முதலீடுகளை மேற்கொள் வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment