Saturday, October 29, 2011

ஜெயாவும் - கருணாநிதியும் ஏமாற்றுக் காரர்கள் -(புலி) வை.கோ

Saturday, October 29, 2011
ஜெயலலிதாவும், கருணாநிதியும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் (புலி) வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் மூவரின் விடுதலை தொடர்பிலான கோரிக்கை மனுவை தமிழக அரசாங்கம் தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது அவர்களை தூக்கிலிட அனுமதி வழங்கியதற்கு சமமாகும்.

அவர்களின் விடுதலை தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இது ஒரு ஏமாற்று நாடகமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஏமாற்றுக் காரர்கள் எனவும், அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனவும் வை.கோ. சுட்டிகாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment